Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வன உயிரின வாரிய உறுப்பினர்கள் நியமனம்

வன உயிரின வாரிய உறுப்பினர்கள் நியமனம்

மாநில வன உயிரின வாரியத்தின் தலைவராக தமிழக முதல்வர் விஜய்யும், துணைத் தலைவராக வனத் துறை அமைச்சரும் செயல்படுவர்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக மாநில வன உயிரின வாரியத்தை மாற்றியமைத்தும், புதிய உறுப்பினர்களை நியமித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வன உயிரினங்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவது தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக மாநில வன உயிரின வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் என மொத்தம் 35 பேர் உறுப்பினர்களாக இடம்பெறுவது வழக்கம்.

மாநில வன உயிரின வாரியம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில் மாநில வன உயிரின வாரியத்தின் தலைவராக தமிழக முதல்வர் விஜய்யும், துணைத் தலைவராக வனத் துறை அமைச்சரும் செயல்படுவர். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிவில் காட்பாடி தொகுதி எம்எல்ஏ சுதாகர், மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், திரு.வி.க. நகர் தொகுதி எம்எல்ஏ பல்லவி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் வன உயிரினப் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் மூன்று தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் என 10 பேரும், வனத் துறைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் 14 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரியத்தின் கூட்டங்களில் தமிழக அரசின் தலைமைச் செயலர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
அம்மா மருந்தகங்களை முழுமையாக திறக்க இபிஎஸ் வலியுறுத்தல்
அடுத்த செய்தி
IL&FS moves NCLT to recover ₹186 crore from 23 ex-directors

தொடர்புடைய செய்திகள்